பதிவு செய்த நாள்
08 ஜூலை2013
12:55

மும்பை: கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, கணிசமான அளவு குறைந்திருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வெளியேறும் அன்னியச் செலாவணிக்கும், கையிருப்பு அன்னியச் செலாவணிக்கும், இடையேயான வித்தியாசமாக கருதப்படும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதால், தங்கம் இறக்குமதி மீதான வரியை, மத்திய அரசு அதிகரித்து வருகிறது.
கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 5 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, 2013, அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மோசமான பொருளாதார அறிகுறியாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், 50 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் கெடுபிடிகளால், இந்த ஆண்டு ஜூன் மாதம், இறக்குமதி தங்கத்தின் அளவு, 38 டன்களாகக் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த, கடந்த ஜூன் மாதத்திலிருந்து, இந்த ஜூன் மாதம் வரை, ஓராண்டில், மூன்று முறை இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. 2 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கியும், தங்க நாணயம் மீதான கெடுபிடிகளை அதிகரித்து உள்ளது. வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்ய கெடுபிடி நிபந்தனைகள் விதித்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகள் தங்க நாணய விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதத்தின் தங்கம் இறக்குமதி, முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அளவு குறைந்திருக்கும் என, கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|