நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை?மின் கட்டண சுமை மேலும் அதிகரிக்கும்நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை?மின் கட்டண சுமை மேலும் ... ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ...
நாட்டின் பணவீக்கம் 4.86 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
05:14

புதுடில்லி:சென்ற ஜூன் மாதம், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான, நாட்டின் பொதுபணவீக்கம், 4.86 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது, முந்தைய மே மாதம், 4.70 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.வெங்காயம்:வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக, பணவீக்கம் அதிகரித்துள்ளது.சென்ற 2012ம் ஆண்டு, ஜூன் மாதம், நாட்டின் பணவீக்கம், 7.58 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு, ஜூன் மாதம் பணவீக்கம் குறைந்துள்ளது.
சென்ற ஜூன் மாதம், வெங்காயம், தானியங்கள், அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால், உணவுப் பொருள் பணவீக்கம், 9.74 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது, முந்தைய மே மாதத்தில், 8..25 சதவீதமாக இருந்தது.காய்கறிகளின் விலை, 4.85 சதவீதத்தில் இருந்து, 16.47 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஏப்ரல் மாதத்தில், மைனஸ் 9.05 சதவீதமாக இருந்தது.சென்ற ஜூன் மாதம், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் பணவீக்கம், 12.23 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது, முந்தைய மே மாதம், 11.21 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், தானியங்கள், அரிசி ஆகியவற்றின் பணவீக்கம், முறையே, 16.01 மற்றும் 18.48 சதவீதத்தில் இருந்து, 17.18 மற்றும் 19.11 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
அதே சமயம், இதே காலத்தில், உருளைக்கிழங்கு விலை, மைனஸ் 3.44 சதவீதத்தில் இருந்து, மைனஸ், 14.22 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதுபோன்று, பருப்பு வகைகளின் விலையும், 5.95 சதவீதத்தில் இருந்து, 1.59 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் பணவீக்கம், 7.32 சதவீதத்தில் இருந்து, 7.12 சதவீதமாக குறைந்து உள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், தயாரிப்பு துறையின் பணவீக்கம், 2.75 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய மே மாதம், 3.11 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
எண்ணெய் வித்துக்கள்:இதே காலத்தில், எண்ணெய் வித்துக்கள், கனிமங்கள், நாரிழை உள்ளிட்ட, உணவு சாரா பொருட்களின் பணவீக்கம், 4.88 சதவீதத்தில் இருந்து, 7.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரலில், நாட்டின் பணவீக்கம் 4.89 சதவீதம் என, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 4.77 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.சென்ற வாரம் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற ஜூன் மாதத்தில், 9.87 சதவீதம் (9.31 சதவீதம்) என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)