தங்கம் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது: ப.சிதம்பரம்தங்கம் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது: ப.சிதம்பரம் ... இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
போதிய அளவிற்கு தங்கம் கிடைக்காததால்... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ .13,896கோடியாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
01:11

புதுடில்லி: நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 38.12 சதவீதம் சரிவடைந்து, 13,896கோடி ரூபாயாக குறைந்து உள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 40.63 சதவீதம் குறைந்து, 400கோடி டாலரில்இருந்து, 238கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
நவரத்தினங்கள்:மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 11.13 சதவீதம் குறைந்து, 47,422கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 53,360கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் ஏற்றுமதி, 13.19 சதவீதம் குறைந்து, 981கோடி டாலரிலிருந்து, 851கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இதுகுறித்து, இக்கவுன்சிலின் தலைவர் விபுல் ஷா கூறியதாவது:நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு,போதிய அளவிற்கு தங்கம் கிடைக்காததால், இவற்றின் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
சுங்கவரி:குறிப்பாக, தங்கம் இறக்குமதி மீதான ”ங்கவரி, 2 சதவீதத்தில் இருந்து, படிப்படி யாக, 8 சதவீதம் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில், வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கும், ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்து உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்டின் தங்கம் இறக்குமதி, சென்ற ஜூன் மாதத்தில்,31 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் இறக்குமதி, நடப்பாண்டுமே மாதத்தில், 162 டன்னாகவும், ஏப்ரல் மாதத்தில், 141 டன்னாகவும் இருந்தது. கடந்த2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த தங்கம் இறக்குமதி, 830 டன்னாக இருந்தது. இவ்வாறு விபுல் ஷா கூறினார்.
வைரங்கள்:நடப்பாண்டு ஜூன் மாதத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 27.14 சதவீதம் உயர்ந்து, ரூ6792கோடிபாயிலிருந்து, ரூ8,636கோடியாக வளர்ச்சி கண்டு உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 25.89 லட்சம் காரட்டிலிருந்து, 27.76 லட்சம் காரட்டாக உயர்ந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 71.86 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 11,555கோடி ரூபாயிலிருந்து, 3,252கோடி ரூபாயாக மிகவும் சரிவு அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதி, 2,876கோடி ரூபாய்க்குமேற்கொள்ளப்பட்டது.
ஆனால், நடப்பாண்டு ஜூன் மாதத்தில், இவற்றின் ஏற்றுமதி, முற்றிலுமாக நின்று போயுள்ளது.நவரத்தினங்கள் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதத்தில், 27.88 சதவீதம் வளர்ச்சி கண்டு, 132கோடி ரூபாயிலிருந்து, 169கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வெள்ளி ஆபரணங்கள்:கணக்கீட்டு மாதத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 59 சதவீதம் உயர்ந்து, 404கோடி ரூபாயிலிருந்து, 642கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 182 சதவீதம் அதிகரித்து, 799கோடி ரூபாயிலிருந்து, 2,251கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டு உள்ளது.நடப்பாண்டு ஜூன் மாதத்தில், கச்சா வைர ஏற்றுமதி, 3.12 சதவீதம் அதிகரித்து, 633கோடி ரூபாயிலிருந்து, 653கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இதன் ஏற்றுமதி, 45 சதவீதம் அதிகரித்து, 1,867கோடி ரூபாயிலிருந்து, 2,710கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சிலின் புள்ளிவிவரத்தில்மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)