பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
00:04

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்தது.நேற்று முன் தினம், ரூபாயின் வெளி மதிப்பு, 59.35 ஆக இருந்தது.இந்நிலையில், நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 21 காசுகள் வீழ்ச்சி கண்டு, 59.56 ஆக சரிவடைந்தது. பின்னர் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இருந்தபோதிலும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 33 காசுகள் சரிவடைந்து, 59.68 ஆக இருந்தது.ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால், நடப்பு வாரத்தில், சென்ற செவ்வாய் அன்று, ரூபாய் மதிப்பு உயர்ந்தது. எனினும், அடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் அதன் மதிப்பு சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|