பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
00:06

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.நேற்றைய வியாபாரத்தில், ரியல்எஸ்டேட், வங்கி, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 179.68 புள்ளிகள் அதிகரித்து, 20,128.41 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,176.90 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,956.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., எச்.டீ.எப்.சி பேங்க், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், மகிந்திரா, ஸ்டெர்லைட் இந்தியா, என்.டி.பி.சி., உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 64.75 புள்ளிகள் உயர்ந்து, 6,038.05 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,051.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,974.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|