பதிவு செய்த நாள்
19 ஜூலை2013
12:13

புதுடில்லி : டில்லியில் அசோசெம் அமைப்பு சார்பில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என உறுதி அளித்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது : நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை உள்ளது; வளர்ச்சிக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் களையப்படும்; இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் சரிந்து வருவது வேதனை அளிக்கிறது; இதனை சரி செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது; இது பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட்டில் எதிர்பார்த்ததை விட மிக குறைவாகும்; நாடு தற்போது சிக்கலான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது; தொழில்துறையை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அரசு முயற்சி செய்து வருகிறது; தங்கம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை குறைப்பது அவசியம்; நாட்டின் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 2004-05 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில் வறுமை நிலை 2 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|