பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
01:48
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 112 ரூபாய் உயர்ந்து, 20,128 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,502 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,016 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, ஆபரண தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் உயர்ந்து, 2,516 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 112 ரூபாய் அதிகரித்து, 20,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் உயர்ந்து, 26,905 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,145 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|