தங்கம் விலை சிறிது உயர்வுதங்கம் விலை சிறிது உயர்வு ...  டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் டிஸ்க் பிரேக் வேலை செய்யும் விதம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஓட்டவேண்டாம்! அப்படியே பறக்கலாம்! புதிய டிஸ்கவர் 125கூ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
14:12

பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார் பைக் டிஸ்கவர் 125T, அவர்களின் டிஸ்கவர் பைக் வரிசையில் மற்றொரு உறுப்பினராக சேர்ந்துள்ளது. போன வருடம் மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்போர்டியான டிஸ்கவர் 125 ST மற்றும் இந்த வருடம் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் 100T இரண்டிலுமான சிறப்பு அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய டிஸ்கவர் 125T. விலை மற்றும் செயல்திறனில் வாடிக்கையாளர்களின் தேவையை முழுவதுமாய் பூர்த்தி செய்யும் வகையில் வந்துள்ளது புதிய டிஸ்கவர் 125T. இதனை பெரிய அளவிலான, வேகமான, ஸ்டைலான பைக் என்று சொல்லுமளவிற்கு பல பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது.

வேகமான பைக் ஏன்?
இதில் உள்ளது பஜாஜின், பிரத்யேக காப்புரிமம் பெற்ற 124.6சிசி திறன் கொண்ட 4 வால்வ் DTSi என்ஜினாகும். இது 12.5 PS பவரை வழங்குகிறது. தடையற்ற வேகத்தை தரும் இதன் பவர் இந்த செக்மன்டின் மற்ற வாகனங்களை விட 30 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதிகபட்ச வேகமாக 105 கிலோமீட்டர் மணிக்கு செல்வதுடன் 10.8NM டார்க்கை வழங்கி மிக எளிதாக்குகிறது. மேலும் ஒரு சிறப்பம்சம் வேகமாகவும், மென்மையாகவும் கியர் மாற்ற உதவும் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் ஆகும்.

கம்பீரமான பெரிய தோற்றம் எதனால்?
இந்த செக்மன்ட் வண்டிகளில் இதுவே 1305மிமி நீளமான வீல்பேஸ் கொண்டதாகும். ஸ்போர்டியான, பெரிய, உறுதியான டாங்க்கும், மிக நீளமான வசதியான இருக்கையும் இதன் தோற்றத்தை கம்பீரமாகவும் பெரிதாகவும் எடுத்துக் காட்டுகிறது.

ஸ்டைலான வடிவமைப்பு எப்படி?
செதுக்கப்பட்ட அழகிய டாங்க், முரட்டுத்தனமான கூர்மையான இணைப்புகள் கொண்ட ஹெட்லாம்ப், 10 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல், ஸ்போர்டியான பெட்டல் டிஸ்க் ப்ரேக் மற்றும் இரண்டு வண்ண க்ராபிக்ஸ் போன்ற இந்த பைக்கின் தோற்றத்தை ஸ்போர்டியான ஸ்டைலாக காட்டுகிறது.

புதிய டிஸ்கவர் 125T இன் மற்ற சில சிறப்பம்சங்கள் இதன் காஸ்-சார்ஜ்ட் நைட்ராக்ஸ், சஸ்பென்ஷனும், எலக்ட்ரிக் ஸ்டார்டும், விட்டுவிட்டு எரியும் தன்மை இல்லாத டிசிஹெட்லாம்ப், எரிபொருள் சிக்கனம், டிஸ்க் ப்ரேக், டிரம் ப்ரேக் இதில் எது வேண்டுமோ தேர்ந்தெடுத்துக் கொள்ள இரண்டு வேரியன்ட்கள் போன்றவைகளாகும்.
டிஸ்கவர் 125T அழகிய 4 கண்கவர் வண்ணங்களான ப்ளேம் ரெட், ப்ரில்லியன்ட் ப்ளூ, மிட்நைட் ப்ளாக் (சிவப்பு டீகால் கொண்டது) மற்றும் மிட்நைட் ப்ளாக் (நீல டீகால் கொண்டது) போன்றவைகளில் கிடைக்கிறது. புதிய டிஸ்கர் 125T அதிக செயல்திறனுடன் அழகிய கம்பீரமான வடிவமைப்புடனும் அதேநேரம் விலை மற்றும் எரிபொருள் சிக்கனத்தில் சமரசம் செய்துக் கொள்ளாத வகையில் அதிக தூரம் தினசரி பயணம் செய்பவர்களுக்கென்ற சிறப்பான பைக் என்று கூறலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)