பதிவு செய்த நாள்
20 ஜூலை2013
15:39
நிசான் மோட்டார் கம்பெனி லிமிடெட் டேட்சன் ப்ராண்டை மீண்டும் உயிர்பித்துள்ளனர். இந்திய வாகன சந்தைக்கு டேட்சன் ப்ரான்ட்டை அறிமுகப்படுத்தும் வகையில் புது டில்லியில் ஜூலை 15ம் தேதி இந்த நூற்றாண்டின் முதல் டேட்சன் காரான டேட்சன் GO வை அறிமுகப்படுத்தியுள்ளது. தனக்கென ஒரு கார் வேண்டும் என்று ஏங்குவோரின் கனவை நனவாக்கும் விதமாக கச்சிதமான வடிவத்தில், 4 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் ஐந்து பேர் கொண்ட சிறிய குடும்பம் பயணிக்கும் வகையில் பல நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது டேட்சன் GO1.2 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் நெரிசலான போக்குவரத்திற்கு வசதியான தொழில்நுட்ப அம்சங்களுடன் உள்ளது டேட்சன் GO உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள இக்காரை நிசான் 2014 முதல் விற்பனைக்கு இந்தியாவில் கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|