பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
01:22

இன்றைய இளைஞர்கள், விலையை பொருட்படுத்தாமல், கவர்ச்சிகரமான "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களை வாங்கி வருகின்றனர்.அவர்களின் ரசனைக்கேற்ப, பல நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உயர் வகை மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த துவங்கிஉள்ளன.இதன்படி, சென்னையை சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், ஜெர்மனியின் பீ.எம்.டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்துடன் இணைந்து, "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.
எரிபொருள் சிக்கனம்:இதன் மூலம், வரும் 2015ம் ஆண்டு முதல், உலகப் புகழ் பெற்ற பீ.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள், இந்திய சாலைகளில் விரைவதை காணலாம்.500 சி.சி.,க்கு குறைவான என்ஜின் திறனுடன் வெளி வர உள்ள இந்த மோட்டார்சைக்கிள்களின் விலை, 2 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என, தெரிகிறது.விலை குறைந்த, சிக்கனமான எரிபொருள் செலவில் அதிக மைலேஜ் தரக்கூடிய, 75 சி.சி., - 125 சி.சி., என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு, இன்றைய இளைஞர்களிடம் வரவேற்பு குறைந்து வருகிறது.அதற்கு மேற்பட்ட திறனில், அதிக விலையில், குறைந்த மைலேஜ் தரக்கூடியவையாக இருந்தாலும், கவர்ச்சிகரமான, சர்வதேச பிராண்டுடன் சந்தைக்கு வரும் மோட்டார் சைக்கிள்களையே அவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
சந்தையில் தீவிரம்:அதனால், லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது.இதை கருத்தில் கொண்டு, யமஹா, ”‹கி, ஹியோசங், காவாசாகி, ஹஸ்க்வர்னா, கே.டி.எம்., பியாஜ்ஜியோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டிரியம்ப் போன்ற நிறுவனங்கள், "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களை சந்தைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
நிறுவனங்கள் ஆர்வம்:கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம், உயர்வகை மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் தனிக்காட்டு ராஜாவாக, 95 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது.இந்நிலையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த 2011ம் ஆண்டு, உயர் பிரிவில், "சி.பீ.ஆர் 250 ஆர்' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாயின.
இதைத் தொடர்ந்து, யமஹா, ”‹கி நிறுவனங்களும், 250 சி.சி. மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.அறிமுகம்:காவாசாகி நிறுவனத்தின், 300 மற்றும் 650 சி.சி. மோட்டார் சைக்கிள்களை, இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது.இந்நிறுவனம், கே.டி.எம். நிறுவனத்துடன் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, "டியூக் 200' மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது.அண்மையில்,18 லட்சம் ரூபாய் விலை கொண்ட, "டியூக் 390' மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"இதற்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான இரண்டு வாரங்களில், 1,000 வாகனங்கள் வேண்டி முன்பதிவு செய்யப்பட்டுள்ளன' என, பஜாஜ் புரோபைக்கிங் நிறுவனத்தின் துணை தலைவர் அமித் நந்தி தெரிவித்துள்ளார்.பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் பிரபலமான "பல்சர்' மோட்டார் சைக்கிளை, 375 சி.சி. திறனில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதே போன்று, கொரியாவின் ஹியோசங் நிறுவனம், இந்தியாவின் டீ.எஸ்.கே., நிறுவனத்துடன் இணைந்து, 250 - 600 சி.சி திறனில், ஐந்து வகையான மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இவற்றுடன், ஹார்லி டேவிட்சன், டுக்காட்டி, அப்ரில்லா போன்ற சர்வதேச நிறுவனங்களின், இறக்குமதி செய்யப்பட்ட, 800 சி.சி.,க்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விற்பனை உயர்வு:இளைஞர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதால், உயர்வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை உயர்ந்து வருகிறது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மோட்டார் சைக்கிள் விற்பனை, 4 சதவீதம் குறைந்து, 25.20 லட்சமாக சரிவடைந்துள்ளது. இருந்த போதிலும், "பிரிமியம்' வகை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, 46 சதவீதம் உயர்ந்து, 40,852 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|