பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
01:24

சென்னை:சென்னையைச் சேர்ந்த இன்தேவ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மன்னூர் கிராமத்தில், சேமிப்பு கிடங்கு வர்த்தக மையத்தை நிறுவியுள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் சேவியர் பிரிட்டோ கூறியதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டிற்கு, சரக்கு போக்குவரத்து மிக முக்கியமான ஒன்றாகும். இதை கருத்தில் கொண்டு, நிறுவனம், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, சர்வதேச தரத்திலான சேமிப்பு கிடங்கு வர்த்தக மையத்தை உருவாக்கி உள்ளது.
வாகனங்கள், தொலைத்தொடர்பு, விமானம் மற்றும் மருந்துவத் துறை நிறுவனங்கள், எந்தவித முதலீடும் இன்றி, இந்த சேமிப்பு கிடங்கை முழுமையான அளவில் பயன்படுத்தி கொள்ள முடியும்.நிறுவனம், இந்தியாவில், அதன் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுக்காக, 20 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. இப்புதிய மையத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, பல்வேறு கட்டங்களில், 2 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு, சேவியர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|