பதிவு செய்த நாள்
22 ஜூலை2013
12:19

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 9.36 புள்ளிகள் சரிந்து 20140.22 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.20 புள்ளிகள் சரிந்து 6025.00 புள்ளிகளோடு காணப்பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்று, மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரம் சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், "நிப்டி' சரிவுடனும், "சென்செக்ஸ்' சற்று உயர்வுடனும் முடிவடைந்தன. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாததால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குசந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|