பதிவு செய்த நாள்
23 ஜூலை2013
00:34

ஈரோடு: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, பருத்தி மற்றும் நூலிழை வங்கி அமைக்கும் திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பருத்தி உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சீனா :உலக அளவில், ஜவுளி தொழிலில், சீனா முதலிடத்தில் உள்ளது. இத்துறையில், சீனாவுக்கு போட்டியாகவும், இணையாகவும், இந்தியா விளங்குகிறது.
சில ஆண்டுகளாக, மத்திய அரசின் நிலையற்ற கொள்கையால், ஜவுளித்தொழில் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், ஜவுளித் தொழிலில், வங்கதேசம் போன்ற சிறிய நாடுகள் கூட, இந்தியாவை விஞ்சும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் கூறியதாவது:மத்திய அரசின் தவறான புள்ளி விவரங்கள், கொள்கை, வழிகாட்டுதலால், பருத்தியின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது.இந்தியாவில், 380 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகின்றன. இவற்றை, பதுக்கல்காரர்களும், தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களும், ஊகவணிகம் மூலம் வாங்கி, அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், உண்மையான நூற்பாலைகளுக்கு, பருத்தி கிடைப்பது இல்லை.அடக்க விலை:ஏற்றுமதி துறையில், ஆறு மாதத்துக்கு முன் கொடுத்த தயாரிப்பு விலையில், 35 முதல், 60 சதவீதம் வரை, அடக்க விலை உயர்ந்ததால், ஏற்றுமதியாளர்கள் நஷ்டமடைந்தனர்.
ஜவுளித் தொழிலில், சீனாவுக்கு போட்டியாக திகழ்ந்த, இந்தியாவுக்கு, தற்போது, வங்கதேசம், கம்போடியா, வியட்நாம் போன்ற சிறிய நாடுகள் கூட சவாலாக உள்ளன. எனவே, பருத்தியை அரசே கொள்முதல் செய்து, பஞ்சாலைகளுக்கு தர வேண்டும். நூலிழை விலையை அரசே, நிர்ணயம் செய்ய வேண்டும். பருத்தி, நூலிழைக்கு, ஆறு மாதத்துக்கு நிலையான விலையை மத்திய, மாநில அரசு நிர்ணயிக்க வேண்டும்.
ஊக வணிகத்தில் இருந்து, பருத்தியும், நூலிழையும் நீக்கப்படப்பட வேண்டும். சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு, கடலில் கலத்தல் ஆகிய திட்டத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். காஞ்சிபுரம்:தமிழகத்தில், ராஜபாளையம், ஈரோடு, மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பருத்தி நூலிழையை இருப்பு வைத்து, உரிய விலை கிடைக்கும் போது, அவற்றை விற்பனை செய்ய ஏதுவாக, பருத்தி, நூலிழை வங்கி அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.ஆனால், இன்றளவும் இத்திட்டம் கிடப்பில் தான் உள்ளது. நூலிழை, பருத்தி வங்கியை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|