தங்கம் விலை சிறிது குறைவுதங்கம் விலை சிறிது குறைவு ... 2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை 2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை ...
விரைவில் வருகிறது பெட்ரோல் பங்க்கில் சமையல் எரிவாயு நிரப்பும் முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
11:52

புதுடில்லி : பெட்ரோல் பங்க்கிலேயே சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் முறையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் நான்கு முக்கிய மெட்ரோ நகரங்கள் மற்றும் பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை வணிக ரீதியிலான விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறிய ரக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்ப ரூ.361 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. டில்லியில் மானிய விலை வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.400 க்கு விற்கப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் என்ற அளவை தாண்டும் மானியம் அல்லாத 14.5 கிலோ சிலிண்டர் விலை ரூ.832 ஆக உள்ளது. வர்த்தக உபயோகத்திற்கான, மானியம் அல்லாத 19 கி‌லோ சிலிண்டரின் விலை ரூ.1375 ஆகும்.

பெட்ரோல் பங்க்கில் நிரப்பும் வசதி:

முதல்கட்டமாக இந்த 5 கிலோ எரிவாயு நிரப்பும் சிலிண்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. சோதனை முறையாக செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை மக்களின் வரவேற்பை பெறும்பட்சத்தில் மெல்ல மெல்ல அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மாநில எரிபொருள் விற்பனையாளர்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், அவர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எரிவாயுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு தொழில்துறை நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயம், இத்திட்டத்தை அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் தண்ணீர் கேன்கள், மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்ற எரிவாயு நிரப்பும் சிலிண்டர்களை விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கி உள்ளன.

மக்களுக்கு வசதியானது:

5 கிலோ சிலிண்டர்கள் தாரளமாக விற்பனை செய்யப்படும் திட்டத்தின் மூலம் 2 முதல் 3 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தும் பெருநகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளம் பணியாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் பயன்பெற உள்ளனர். இவர்கள் மானிய விலையில் பெறும் சிறிய சிலிண்டர்களில் முறைகேடாக எரிவாயு நிரப்ப ரூ.150 அல்லது அதற்கு மேல் செலுத்தி வருகின்றனர். விசேஷங்களின் போது அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் இந்த எரிவாயு நிரப்பும் திட்டம் உதவிகரமாக இருக்கும். காஸ் ஏ‌ஜென்சிகளின் வேலைநேரம் அல்லாத சமயங்களிலும் தாமாகவே சென்று சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பிக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது டீலர்கள் அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பதையும் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோல் பங்க்கள் பாதுகாப்பு உரிமங்களை பெற்றுக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டர் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் முதலில் இந்த திட்டத்தை குறிப்பிட்ட விலை நிர்ணயத்தில் டீலர்கள் மூலமே விற்பனை செய்யலாம் எனவும், இதற்காக டீலர்கள் கொள்கைகளையும் மாற்றி அமைக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)