2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை2 கோடி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 விற்பனை ... கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும் கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும் ...
நாட்டின் உருக்கு உற்பத்தி 65 லட்சம் டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
00:54

புதுடில்லி:நாட்டின் உருக்கு உற்பத்தி, சென்ற ஜூன் மாதம், 0.9சதவீதம் உயர்ந்து, 64.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 63.90 லட்சம் டன்னாக இருந்தது.
இதே மாதத்தில், உலகளவிலான உருக்கு உற்பத்தி, 1.9சதவீதம் அதிகரித்து, 13.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு (டபிள்யூ. எஸ்.ஏ.,) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி:இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பாண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், உலக நாடுகளின்சராசரி உருக்கு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் உருக்குஉற்பத்தி வளர்ச்சி சிறப்பாகஉள்ளது.மேற்கண்ட ஆறு மாதங்களில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 2.5சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.96 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2012ம் ஆண்டு, இதே காலத்தில், 3.86 கோடி டன்னாக இருந்தது.
இதே காலத்தில்,சர்வதேசகச்சா உருக்குஉற்பத்தி, 2சதவீதம் வளர்ச்சி கண்டு,78.98 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஆசிய அளவில் உருக்கு உற்பத்தி, 5.5சதவீதம் அதிகரித்து உள்ளது. அதேசமயம், இதர பிராந்தியங்களில், அதன் உற்பத்தி வளர்ச்சியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதம், சீனாவின் கச்சா உருக்குஉற்பத்தி, 4.6சதவீதம் வளர்ச்சி கண்டு, 6.47 கோடி டன்னாக அதி கரித்து உள்ளது. இதே காலத்தில், ஜப்பான் நாட்டின் கச்சாஉருக்குஉற்பத்தி, 0.9 சதவீதம் உயர்ந்து, 93 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
அதேசமயம், சென்ற ஜூன்மாதம், தென் கொரியாவின் கச்சா உருக்குஉற்பத்தி, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட5.4சதவீதம்சரிவடைந்து, 55 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.அது போன்று, ஐரோப்பிய கூட்டமைப்பில் இடம் பெற்று உள்ள, 27 நாடுகளின் கச்சா உருக்கு உற்பத்தி, சென்ற ஜூன் மாதம், 5.1சதவீதம்சரிவடைந்து உள்ளது.
தென் அமெரிக்கா:இதே காலத்தில், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் கச்சா உருக்கு உற்பத்தியும், முறையே, 5.8சதவீதம் மற்றும் 4.6சதவீதம் வீழ்ச்சி கண்டுஉள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த இத்தாலி தான் கச்சா உருக்குஉற்பத்தியில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.இந்நாட்டின் கச்சா உருக்குஉற்பத்தி, சென்ற ஜூன்மாதம், 22 லட்சம்டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உருக்கு உற்பத்தியை விட, 10.3சதவீதம் குறைவாகும்.
அது போன்று, இதே காலத்தில், ஜெர்மனியின் உருக்கு உற்பத்தியும், 2.2சதவீதம் சரி வடைந்து, 37 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது. அதேசமயம், இதே காலத்தில், பிரான்ஸ் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி, 2.8சதவீதம் வளர்ச்சி கண்டு, 14 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் நீங்கலாக, உலக கச்சா உருக்கு உற்பத்தியில், அமெரிக்காவின் பங்களிப்பும் குறைந்துள்ளது.
சென்ற ஜூன் மாதம், அமெரிக்காவின் உருக்குஉற்பத்தி, சென்றஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.2சதவீதம் குறைந்து, 72 லட்சம் டன்னாக சரிவடைந்துள்து.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு பணிகள் :உலகளவில், உருக்கிற்கான தேவை குறைந்துள்ளது. அதேசமயம், இந்தியாவில், ஏராளமான சாலைகள், மேம்பாலங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின் றன. இதனால், உருக்கு தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.இருந்தபோதிலும், பொருளாதார மந்தநிலை காரணமாக, அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வால், உருக்கிற்கான தேவையில் தொய்வு காணப்படுகிறது.
உலக உருக்கு கூட்டமைப்பு:உலக உருக்கு கூட்டமைப்பில்,சர்வதேச அளவில், 20 மிகப் பெரிய உருக்கு நிறுவனங்கள் உட்பட, 170 உருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. உலகின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி யில், இந்த கூட்டமைப்பை சேர்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு, 85சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)