பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
01:02

புதுடில்லி:அனைவருக்கும் குறைந்த விலையில் பால் கிடைக்க, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்டத்தில், அமைப்பு சார்ந்த துறைகளின் பால் உற்பத்தி, 50சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர்சரத் பவார் தெரிவித்தார்.
மத்திய வேளாண் அமைச்சகமும், இந்திய தொழிலக கூட்டமைப்பும் இணைந்து டில்லியில் கருத்தரங்கை நடத்தின. இதில்சரத் பவார் பேசியதாவது:நடப்பாண்டில், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வறட்சி நிலவிய போதும்,பால் உற்பத்தி குறையவில்லை.இதனால்,சந்தையில், பால் அளிப்பு போதுமான அளவிற்கு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயும், விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும், இந்தியா, 12.80 கோடி டன் அளவிற்கு பால் உற்பத்தி செய்து,சர்வதேச அளவில், முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில், பால் வர்த்தகத்தில், அமைப்புசார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு, 30சதவீதம் என்ற அளவிலுள்ளது. இது, நடப்பு ஐந்தாண்டு திட்ட இறுதியில், 50சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.நடப்பு ஐந் தாண்டு திட்ட காலத்தில், பாலுக்கான தேவை, 15 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப் பட் டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு ,தேசிய பால் திட்டத்தில் முதற்கட்டமாக, 2,200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
நாட்டின் 75சதவீத பால் உற்பத்தியில், சிறு விவசாயிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. மொத்தம் 1.50 கோடி விவசாயிகள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை, 15 லட்சம் கூட்டுறவுசங்கங்கள் ஒழுங்குபடுத்தி வருகின்றன. கால்நடை தீவனங்களுக்கான பற்றாக்குறை, 36சதவீதம் என்ற அளவில் உள்ளது என, கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, தீவன அளிப்பை அதிகப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு முதற்கட்ட நடவடிக்கை களை எடுத்து வருகிறது.இவ்வாறு, பவார் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|