பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
01:04

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என, மத்திய வேளாண் அமைச்சர்சரத்பவார் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா:டில்லியில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:உள்நாட்டில், வெங்காயம் விலை உயர்ந்து வருவதால், இதன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என, கூறப்படுகிறது. ஆனால், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில்,சர்வதேசசந்தையில், இந்திய விளை பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளின் மத்தியில், இது, நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது தற்காலிகமானதுதான். வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிகளவில் மழை பெய்து வருவதால், வெங்காயம் கொண்டு வருவதற்கானசரக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலை கூடிய விரைவில்சரியாகி, இதன் விலை குறையத் துவங்கும்.மேலும்,சந்தைகளுக்கு, புதிய வெங்காய வரத்து அதிகரிக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் இதன் விலை, படிப்படியாக குறையத் துவங்கும்.
தமிழகத்தில், இதன் உற்பத்தி குறைந்துள்ள நிலையிலும், நடப்பாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த வெங்காயம் உற்பத்தி,1.50 - 1.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, உள்நாட்டில் வெங்காயம் விலை உயர்ந்து வருவது குறித்து, அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு,சரத்பவார் கூறினார்.
நடப்பு நிதியாண்டின், முதல் மூன்று மாதக் காலத்தில் (ஏப்.,-ஜூன்), நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, 5.12 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 776 கோடி ரூபாயாகும். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், வெங்காயம் ஏற்றுமதி, 5.17 லட்சம் டன்னாக இருந்தது.
மொத்த விலை:தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அளிப்பு இல்லாததால், இதன் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, டில்லி சில்லரை விற்பனைசந்தையில், ஒரு கிலோ வெங்காயம், 35 - 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே, மிகப்பெரியசந்தையாக திகழும், மகாராஷ்டிராவில் உள்ள லசல்கான் மொத்த விலைசந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 25 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
ஏற்றுமதி:கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் ஏற்றுமதி, 2.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.86 லட்சம் கோடி ரூபாயாக காணப்பட்டது.வெங்காயத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்த, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும், இதன் ஏற்றுமதிக்கு, தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என, கோரி வந்தன.இந்நிலையில்,சரத்பவார், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில், தனக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது டில்லி நிருபர் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|