பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
09:46

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.97 புள்ளிகள் சரிந்து 20078.71 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.35 புள்ளிகள் சரிந்து 5982.15 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவை தடுக்கும் வகையில், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு செய்திருந்தது.
இது, நேற்றைய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், "சென்செக்ஸ்' 1.04சதவீதம்சரிவடைவதற்கும் வழி வகுத்தது.நடப்பு மாதத்தில், சீனாவில் தொழில்துறை உற்பத்திசரிவடையும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர்சாதனங்கள், பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|