பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
11:26

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இம்மாதம் 29ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, "சிறப்பு கவுன்டர்'கள் திறக்கப்படுகின்றன. இதுகுறித்து, வருமான வரித் துறை மக்கள் தொடர்பு அலுவலர், பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இம்மாதம், 31ம் தேதிக்குள், 2012 - 13ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் வருமான வரி அலுவலகங்கள் தவிர, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில், 29, 30, 31 ஆகிய தேதிகளில், "சிறப்பு கவுன்டர்'கள் திறக்கப்படுகின்றன. வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யத் தேவையான படிவங்களை, www.incometaxindia.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, 044 - 28338314 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, பாஸ்கரன் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|