வரத்து குறைவால் கொப்பரை விலை உயர்வுவரத்து குறைவால் கொப்பரை விலை உயர்வு ... நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது நாட்டின் யூரியா இறக்குமதி செலவினம் குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உலக வாகன சந்தை: இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
13:11

புதுடில்லி:வரும் 2016ம் ஆண்டில், இந்தியா, உலக அளவில் உள்நாட்டு வாகன விற்பனையில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்தை பிடிக்கும் என, சர்வதேச ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எஸ் ஆட்டோமோட்டிவ் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா:கடந்த 2012ம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில், உள்நாட்டு வாகன விற்பனையில், சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை அடுத்து, இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது. பொருளாதார சுணக்க நிலை மற்றும் வட்டி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்திய மோட்டார் வாகன சந்தையின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து, வரும், 2014ம் ஆண்டிலிருந்து, இந்திய வாகன சந்தை வேகம் பிடிக்கும் என, இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.நீண்ட கால அடிப்படையில், இந்திய வாகனச் சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களும், அன்னிய நிறுவனங்களும் அதிகஅளவில் முதலீடு மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவின் இலகு ரக வாகனங்களின் உற்பத்தி, 70 லட்சமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச நெருக்கடி நிலையால், இந்தியாவில், மோட்டார் வாகனங்களுக்கான தேவை வளர்ச்சி குறைந்துள்ளது. மேலும், உள்நாட்டில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நகர்புறங்களில், வாகனங்களுக்கான கட்டுப்பாடு போன்றவையும், இந்தியாவில், வாகன விற்பனையை குறைத்துள்ளது.

இருப்பினும், நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், சொகுசு மற்றும் பிரிமியம் வகை கார்கள் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மேற்கண்ட பிரிவுகளில், பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

செலவிடும் வருவாய்:இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. இருப்பினும், மக்களின் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவது, இந்திய மக்களின் சுதந்திர போக்கு போன்றவற்றால், வரும் 2016ம் ஆண்டில், உலகளவில், உள்நாட்டு கார்கள் விற்பனை வளர்ச்சி அடிப்படையில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என, இந்த ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)