பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
02:00
நாமக்கல்:தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நடை பெற்ற, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி, சந்தை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அப்போது, 325 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 10 காசு குறைத்து, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 332, பெங்களூரு, 325, மைசூரு, 325, ஐதராபாத், 289, மும்பை, 323, விஜயவாடா, 308, கோல்கட்டா, 348, பர்வாலா, 265, டில்லி, 285.நாமக்கல்லில், நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 58 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அதன் விலை, கிலோ, 81 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|