பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
11:10

தமிழக சாலை மேம்பாட்டு திட்டத்தில், 8,583 கோடி ரூபாய் செலவில், 1,678 கி.மீ., நீளமுள்ள, 24 சாலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவி வழங்க, உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், திட்டமிட்டதற்கு முன்பாகவே, இச்சாலைப் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த, பல சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. தற்போதைய வாகன போக்குவரத்து ஏற்ப, பல சாலைகள் விரிவுப்படுத்தப் படவில்லை. இதை கருத்தில் கொண்டு, "தமிழக சாலை மேம்பாட்டு திட்டம் - 2'ன் கீழ், முக்கிய சாலைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்தது. முக்கிய சாலைகள் குறித்த விவரம், சென்னை ஐ.ஐ.டி., மூலம் சேகரிக்கப்பட்டது. உலக வங்கி நிதியுதவியுடன், 1,678 கி.மீ., நீளமுள்ள, 24 சாலைகளை மேம்படுத்துவது, தொடர்பான அறிவிப்பு, சட்டசபையில் வெளியானது. இதற்கு, நிதியுதவி பெறும் முயற்சி, அரசு தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன், பலனாக,நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே, நிதியுதவி கிடைத்துள்ளதால், சாலைகளின் மேம்பாட்டு பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, 24 சாலைகளை மேம்படுத்துவதற்கான, நிதியுதவி வழங்க, உலக வங்கி முன்வந்துள்ளது. அடுத்தாண்டு, ஜூன் மாதம் உலக வங்கியுடன் கடன் ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசின் தீவிர முயற்சியால், முன்கூட்டியே நிதியுதவி கிடைக்க உள்ளது. எனவே, விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சாலைப்பணி துவங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|