பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
23:53
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 272 ரூபாய் உயர்ந்து, 21,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த இரு தினங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான, ரூபாயின் வெளி மதிப்பு வெகுவாக சரிவு அடைந்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,657 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,256 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 34 ரூபாய் உயர்ந்து, 2,691 ரூபாய்க்கும், சவரனுக்கு, 272 ரூபாய் அதிகரித்து, 21,528 ரூபாய்க்கும் விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 360 ரூபாய் உயர்ந்து, 28,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 45.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,220 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|