பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:14

சென்னை:சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 13 சதவீதம் உயர்ந்து, 949 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் சுதிர்குமார் ஜெயின் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
மதிப்பீட்டு காலாண்டில், வங்கி திரட்டிய டெபாசிட் 16 சதவீதம் அதிகரித்து, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, 1.83 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கி வழங்கிய கடன், 16 சதவீதம் உயர்ந்து, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, 1.49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடுத்தர தொழில், நலிவுற்றோர் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
கடன் வசூல் தீவிரப்படுத்தப்பட்டதால், கணக்கீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வசூலாகாத கடன், 2.38 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. மேலும், புதிதாக, 70 கிளைகள் துவங்கப்பட்டுள்ளன.வருவாயை அதிகரிக்கும் நோக்கில், பரஸ்பர நிதி திட்டங்கள், எல்.ஐ.சி.,யின் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றின் வினியோகத்தையும் வங்கி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு சுதிர்குமார் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|