காலாண்டு நிதி பற்றாக்குறை ரூ.2.63 லட்சம் கோடிகாலாண்டு நிதி பற்றாக்குறை ரூ.2.63 லட்சம் கோடி ... நடப்பு கரீப் பருவ நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும் நடப்பு கரீப் பருவ நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும் ...
முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2013
00:19

புதுடில்லி:முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 0.1 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 7.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கச்சா எண்ணெய்:சென்ற ஜூன் மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி, மைனஸ் 3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ் 0.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 0.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்தங்கி காணப்பட்டது.இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 11.1 சதவீதத்திலிருந்து, மைனஸ் 16.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள்:உற்பத்தி வளர்ச்சி, 26.2 சதவீதத்தில்இருந்து, 2.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், உர துறையின் உற்பத்தி, மைனஸ் 11.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், இவ்வாண்டு ஜூன் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 11.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
உருக்கு:கணக்கீட்டு மாதத்தில், உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.4 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது. சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், 9.5 சதவீதத்தில் இருந்து, 2.3 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.மின்சார துறையின் உற்பத்தி, நடப்பாண்டு ஜூன் மாதத்தில், மைனஸ் 1.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 8.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)