பதிவு செய்த நாள்
02 ஆக2013
00:23

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (ஜூன்-அக்.,), முந்தைய சாதனையை முறியடிக்கும் விதத்தில் நாட்டின் நெல் உற்பத்தி இருக்கும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
பருவமழை:டில்லியில், அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பல மாநிலங்களில் பருவ மழை நன்கு பெய்து வருவதால், நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. பல மாநிலங்களில் உணவு தானியங்களின் உற்பத்தி உயர்ந்துள்ளதாக,தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், நடப்பு கரீப் பருவத்தில், நாடு, நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-12ம் நிதிஆண்டின், கரீப் பருவத்தில், உணவு தானியங்களின் உற்பத்தி, சாதனை அளவாக 13.12 கோடி டன்னை எட்டியது. இதே காலத்தில், நெல் உற்பத்தியும், 9.27 கோடி டன்னாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டது.ஆனால், கடந்த 2012-13ம் ஆண்டு, கரீப் பருவத்தில், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வறட்சி காரணமாக, உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்தது.
ஆனால், நடப்பு கரீப் பருவத்தில், சென்ற வார நிலவரப்படி, நெல் உள்ளிட்ட கரீப் பயிர்களின் சாகுபடி பரப்பளவு, 17.70 சதவீதம் உயர்ந்து, 747.78 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதில், நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு 8.58 சதவீதம் உயர்ந்து, 196.38 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள்:கடந்த வார நிலவரப்படி, நாடு முழுவதும், 21 சதவீதம் கூடுதலாக மழை பொழிந்து உள்ளது. முன்கூட்டிய மழையால், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவும், 90 சதவீதம் அதிகரித்து, 73.62 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதே போன்று, இதர தானியங்களின் சாகுபடி பரப்பளவும், 117.48 லட்சத்தில் இருந்து, 148.82 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|