பதிவு செய்த நாள்
02 ஆக2013
12:29

போர்ட் நிறுவனம் போன, மாத இறுதியில் அறிமுகப்படுத்திய போர்ட் ஈகோஸ்போர்ட் எல்லாராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி. இது அறிமுகப்படுத்தப்பட்ட, 17 நாட்களில், 30,000 யூனிட்கள் புக் செய்யப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்தது செய்தியாகும். இதற்கு காரணமாக, இதன் வடிவமைப்பு, செயல் திறன் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ள க்ராஸ்ஓவர் மாற்றம் மற்றும் நியாயமான விலை போன்றவைகளை சொல்லலாம். இந்திய மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள, இந்த எஸ்யுவிபில் இருக்கும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.
ஈகோ ஸ்போர்ட்டின் திறன்கள்: சாலையின் மேடு பள்ளங்கள், ஒரு பொருட்டே இல்லை என்பதற்கேற்ப, இந்த எஸ்யுவி தங்கு தடையின்றி பயணிக்கிறது. இதற்கு காரணம், 200 மி.மி., கரவுண்ட்க்கியரன்ஸ் மற்றும் 550 மி.மி., வாட்டர் வேடிங் உள்ளதும் ஆகும். கார் கண்ணாடிகளை ஏற்றி விட்டால், உட்புறம் மிகவும் நிசப்தமாகிவிடுவது ஈகோஸ்போர்டில் மிகச் சிறப்பாக உள்ளது.
இதன் நீள அகல அளவுகள் நெரிசலான நகரச் சாலைகளில், சிரமமின்றி செல்லவும், குறுகிய இடங்களிலும் சுலபமாக பார்க் செய்யவும் முடிகிறது. மலைச் சாலைகளின் செங்குத்தான பயணங்களில், இதில் செயல்திறன் மிகச் சிறப்பாக உள்ளது. ஹில்லான்ச் அசிஸ்ட் போட்டு விட்டால் எவ்வளவு செங்குத்தான இடத்திலும், காலை ப்ரேக்கில் இருந்து எடுத்த சில நொடிகள் வரை பிரேக் பிடிப்பாகவே இருக்கும். பின்புறமோ, முன்புறமோ உருளும் அபாயம் இதில் தவிர்க்கப்படுகிறது.
ஈகோ ஸ்போர்டின் சாதுர்யங்கள்: வண்டி ஓட்டும்போது, போன் பேச வேண்டுமா அல்லது பாட்டு கேட்க வேண்டுமா கைய உபயோகிக்கவே வேண்டாம். இந்த பாட்டு வேண்டும் என்றோ, இவரை போனில் கூப்பிடு என்றோ, போன் எஸ்.எம்.எஸ்.யை படி கேட்க உத்தர விடவேண்டியது தான். சொல்வதை கேட்டு செய்கிறது சின்க் (SYNC) விபத்து நிகழ்ந்து ஏர்பேக் விரிக்கப்பட்டாலோ, எரிபொருள் தீர்ந்து போனாலோ அவசர உதவிக்கு தானாகவே போன் செய்வதுடன் இருக்கும் இடத்தையும் GPS மூலம் தெரிவிக்கிறது SYNC. ஈகோஸ்போர்ட் நகர உபயோகத்திற்கென தயாரிக்கப்பட்டிருந்தாலும் உட்புற இடவசதி சிறப்பாக உள்ளது. பின்புற இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடித்து விட்டால், 700 லிட்டர் இடம் கிடைக்கிறது பொருட்கள் வைப்பதற்கு. இதன் க்ளவ் பாக்சில், குளிர்பானங்களை வைத்துக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. காரின் உட்புறத்தில் மட்டும் மொத்தம், 20 இடங்கள் பொருட்கள் வைத்துக் கொள்ள ஏதுவாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர் கண்ணாடி, குடை, புத்தகம், விலை உயர்ந்த பொருட்கள், குளிர்பானங்கள் என்று எதை வேண்டுமானாலும்.
சு.கே ஸ்போர்ட்டின் பாதுகாப்பு: சாலையின் ஸ்திரத்தன்மை, திருப்பங்களில் பாதுகாப்பு மற்றும் வண்டிகளை மாறும்போது வசதி போன்றவைகளை அளிக்க ட்ராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இஎஸ்பி இதில் உள்ளது. எடை குறைவாகவும் சாதாரண ஸ்டீலை விட நான்கு மடங்கு வலிமையாக உள்ள போரான் ஸ்டீலினால் ஆன கதவுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார், இபிடியுடன் இணைந்த ஏபிஎஸ் பிரேக்கிங் போன்ற பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
ஈகோ ஸ்போர்ட்டின் பசுமை அம்சங்கள்: இதன் 1.0 லி ஈகோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு, 18.88 கிலோ மீட்டர் லிட்டருக்கு கொடுக்கிறது. இன்டர்நேஷனல் இன்ஜின் ஆப் தி இயர் விருது, 2012ல் இது வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதே, 1.0 லி பெட்ரோல் இன்ஜினை விட, 20 சதவீத எரிபொருள் சிக்கனத்தை இது அளிப்பதுடன் குறைந்த கரியமில வாயுவையே வெளியிடுகிறது.
மாடல்கள்: இதில் மொத்தம் 10 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு பெட்ரோல் நான்கு டீசல் மற்றும் இரண்டு ஈகோ பூஸ்ட் என்ற மாடல்களில் கிடைப்பதுடன் பெட்ரோல் மாடலில் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷனும் உள்ளது.
நிறங்கள்: மொத்தம் ஏழு அழகிய நிறங்களில் ஈகோ ஸ்போர்ட் கிடைக்கிறது. நகரத்தில் உள்ள பெரிய குடும்பங்கள் சந்தோஷமாக தூரப் பயணங்கள் செய்வதற்கும், சாகச பயணங்கள் மேற்கொள்ளும் கார் பிரியர்களுக்கும், நகரப் போக்குவரத்தில் சிரமமின்றி உபயோகிக்கவும் ஏற்ற சிறப்பான வாகனமாக திகழ்கிறது. போர்ட்டின் ஈகோ ஸ்போர்ட்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|