பதிவு செய்த நாள்
03 ஆக2013
00:18

கோல்கட்டா:நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்.,-ஜூன்), 210 கோடி டாலர் துணிகர முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய முதலாவது காலாண்டில், வெறும், 1.60 கோடி டாலர் என்ற அளவிற்கே இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில், மிகப் பெரிய அளவிலான துணிகர முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், மிக அதிகபட்சமாக, இந்தியாவின் ரிநியூ பவர் நிறுவனத்தின் காற்றலை மின் உற்பத்தி விரிவாக்க திட்டங்களில், 13.50 கோடி டாலர் முதலீடு மேற்கொண்டுள்ளது.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், இது வரையிலுமாக, ரிநியூ நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீடு, 38.50 கோடி டாலரை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், 320 கோடி டாலர் மதிப்பிலான, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை, மிகப்பெரிய அளவில் செயல்படுத்தும் வகையில், 24 ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய முதல் காலாண்டில், 620 கோடி டாலர் (29 ஒப்பந்தங்கள்) என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|