பதிவு செய்த நாள்
06 ஆக2013
17:41

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது இந்திய பங்குசந்தைகள். ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்ததால் இந்திய பங்குசந்தைகள் ஆட்டம் கண்டன. சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிப்டி 143 புள்ளிகள் சரிவுடனும் முடிந்தன.
இந்திய பங்குசந்தைகள் இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சரிவுடன் தான் துவங்கியது. அதேப்போல் ரூபாயின் மதிப்பும் சரிவுடன் துவங்கியது. போகப்போக ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. ஒருகட்டத்தில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.61.80 எனும் உச்சநிலை சரிவை சந்தித்தது. இதனால் இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மாலை 3மணியளவில் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன. இதனால் சென்செக்ஸ் 19ஆயிரத்திற்கு கீழும், நிப்டி 6ஆயிரத்திற்கு கீழும் சென்றது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 449.22 புள்ளிகள் சரிந்து 18,733.04 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 143.15 புள்ளிகள் சரிந்து 5,542.25 எனும் அளவிலும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ., யெஸ் வங்கி, டாடா பவர், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, பெல், எச்டிஎப்சி., எல் அண்ட் டி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட அநேக பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தக சரிவால் இந்திய பங்குசந்தைகள் டிரில்லியன் டாலர் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்தது. தற்போது இந்திய பங்குசந்தைகளின் முதலீடு ரூ.60.2 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தால், ஆசியாவில் டாலருக்கு எதிராக கடும் சரிவை சந்தித்த நாடு எனும் நிலையையும் இந்தியா அடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|