பதிவு செய்த நாள்
06 ஆக2013
21:00

பட்ஜெட் விலையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வீடீயோகான் நிறுவனம் ஏ24 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,699. இதில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. 4 அங்குல திரையில் டிஸ்பிளே கிடைக்கிறது. இரண்டு சிம் இயக்கம், 3.2 மெகா பிக்ஸெல் பின்புறக் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் முன்புறக் கேமரா, எட்ஜ் (2ஜி) தொழில் நுட்பம் ஆகியவை கிடைக்கின்றன. இதன் பேட்டரி 1,450 mAh திறன் கொண்டது. டைம்ஸ் ஆப் இந்தியா, பன் ஸோன், ஹங்கமா போன்ற அப்ளிகேஷன்கள் போனிலேயே பதியப்பட்டு தரப்படுகின்றன. இந்நிறுவனத்தின் வி ஸ்டோரில் (V Store) வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவு செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், A2DP இணைந்த புளுடூத் 2.1, வை-பி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் ராம் மெமரி 252 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி., இதனை எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1,450 mAh திறன் கொண்ட பேட்டரியின் துணையுடன், 4 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 200 மணி நேரம் பேட்டரியில் மின் சக்தி தங்குகிறது. குரோம் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|