பதிவு செய்த நாள்
06 ஆக2013
21:26

புதுடில்லி: நடப்பு 2013–14ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரித்து 1,600 கோடி டாலராக (ரூ.96,000 கோடி) வளர்ச்சி அடையும் என ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு மதிப்பீடு செய்துள்ளது. இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. இந்நாடுகளில் ஆயத்த ஆடைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 11.1 சதவீதம் அதிகரித்து 350 கோடி டாலராக (ரூ.21,000 கோடி) அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் இந்த ஏற்றுமதி அதிகரித்து வருமானால் நடப்பு நிதி ஆண்டில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 1,600 கோடி டாலரை எட்டுவது உறுதி என ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|