பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:54
சென்னை:சென்னையில், நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 20,944 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,643 ரூபாய்க்கும், 1 சவரன், 21,144 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, 2,618 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் சரிவடைந்து, 20,944 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 275 ரூபாய் குறைந்து, 27,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி,43.80 ரூபாய்க்கும், 1 கிலோ பார் வெள்ளி, 40,900 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|