பதிவு செய்த நாள்
08 ஆக2013
01:02

புதுடில்லி:நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.07 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.
அதே சமயம், சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 1.68 லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.நடப்பு, 2012-13ம் எண்ணெய்பருவத்தின் (அக்.,-செப்.,), முதல் 10 மாதங்களில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 31.15 லட்சம் டன்னாக இருந்தது.
இது, சென்ற எண்ணெய்பருவத்தின் இதே காலத்தில், 36.10 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரானுக்கு, அதிக அளவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில் சோயா புண்ணாக்கு விலை அதிகமாக உள்ளதால், அதன் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் தடை :கடந்த, 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 48 லட்சம் டன்னாக இருந்தது. இந் நிலையில்,சென்ற, 2012-13ம் நிதியாண்டில்,இதன் ஏற்றுமதி,14.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது.இதற்கு, ஆபத்து விளை விக்க கூடிய ரசாயனங்கள் இந்திய புண்ணாக்கில் உள்ளதாக கூறி, சீனா தடை விதித்ததே முக்கிய காரணமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|