பதிவு செய்த நாள்
08 ஆக2013
14:21

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால், சீலா (நெய் மீன்) கருவாடு, கிலோவிற்கு 200 ரூபாய் விலை குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.600 க்கு விற்ற சீலா கருவாடு 400 க்கும், 160க்கு விற்ற நகர மீன் கருவாடு 140 க்கும், 220க்கு விற்ற நெத்திலி 200 க்கும், 260க்கு விற்ற பன்னா கருவாடு 250 க்கும், 150க்கு விற்ற கத்தாழை கருவாடு 140க்கும், 150 க்கு விற்ற முள்வாழை 140 க்கும், 220க்கு விற்ற பாறை 200க்கும், 80க்கு விற்ற சூடை 60க்கும், 120க்கு விற்ற விலமீன் கருவாடு 100க்கும், 70க்கு விற்ற கிழங்கன் 80க்கும் விற்கப்படுகிறது. மண்டபம், கருவாடு மொத்த விற்பனையாளர் எம்.தேவபாலன் கூறியதாவது: சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், மீன்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கருவாடு விலை சரிந்து உள்ளது. மழை காலம் வருவதால், இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|