பதிவு செய்த நாள்
08 ஆக2013
14:30

தேனி: பந்தல் காய்கறிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ஹெக்டேருக்கு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் காய்கறிகளுக்கு கடந்த ஆண்டு வரை, ஹெக்டேருக்கு(2.5 ஏக்கர்) 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதனை நடப்பு நிதி ஆண்டு முதல் இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அத்தனை பேரும் இந்த வசதிகளை பயன்படுத்தலாம். அதேபோல் பந்தல் காய்கறிகளான கோவங்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரை, மற்றும் திராட்சை உட்பட பழப்பயிர்களுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.விவசாயிகள் விண்ணப்பித்து அனுமதி பெற்றவுடன், தங்கள் தோட்டங்களில் முதலில் சொந்த செலவில் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விவசாயிகளின் வங்கி கணக்கில், அரசு நேரடியாக 2 லட்சம் ரூபாயை செலுத்தி விடும். பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம், என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|