தொழில்துறை முதலீடுகளிட்டு திட்டங்களிலும் குஜராத் முதலிடம்தொழில்துறை முதலீடுகளிட்டு திட்டங்களிலும் குஜராத் முதலிடம் ... நாட்டின் பருத்தி உற்பத்தியில்புதிய சாதனை படைக்க வாய்ப்பு நாட்டின் பருத்தி உற்பத்தியில்புதிய சாதனை படைக்க வாய்ப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அமைதியாய் ஆர்ப்பரிக்கும் ஆடி ஏ4
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
19:38

சிறப்பான செயல்திறன், கம்பீரமான அழகான தோற்றம், கட்டமைப்பான வடிவமைப்பு, சாதுர்யமான அம்சங்கள், வியக்க வைக்கும் ஆற்றல் இதுவே ஆடி ஏ சிரீசின் ஏ4 செடான் கார். சொகுசுப் பிரிவில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது ஆடி ஏ4 இல். ஆடிஏ4 - அழகுத் தோற்றம்: முப்பரிமாணத்தில் கடைந்து எடுத்தது போன்ற முகப்புத் தோற்றம் இதில் இருக்கிறது. பகல்நேர லைட் ஸ்ட்ரிப் கொண்ட ஜெனான் ப்ளஸ் ஹெட்லைட் பார்க்க மட்டுமின்றி செயலிலும் சிறப்பாக ஒளிர்கிறது. இந்த செடானின் பக்கவாட்டு தோற்றம் சற்றே நீண்ட மேற்கூரை, நீளமான பானட் போன்றவை எடுப்பான கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

ஆடிஏ4 - ஆற்றல் மிகுந்த இன்ஜின்: தன் சக்தி வாய்ந்த TFSI பெட்ரோல் இன்ஜின் சிக்கனமான டைரக்ட் இன்ஜெக்ஷன் மற்றும் டர்போசார்ஜிவ் இரண்டும் இணைந்து, சிறப்பான செயல் திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகின்றன. மேலும், இதன் ஸ்டார்ட் ஆண்ட் ஸ்டாப் சிஸ்டமும் மற்றும் ரெக்யூப்பரேஷன் மூலம் இந்த செக்மென்ட் கார்களிலேயே அதிக எரிபொருள் சிக்கனம் கொடுப்பது ஆடியின், ஏ சீரிஸ் கார்கள் எனலாம். இதன் டீசல் இன்ஜின் காமன் ரயில் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பமும், பார்டிகுலேட் பில்டரும் கொண்டுள்ளதால் க்ளீன் டீசல் வெர்ஷன் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது. சிறந்த பவர் மற்றும் டார்க்கை வழங்கும் டி.டி.ஐ இன்ஜினை முதன் முதலில் கொண்டு வந்து வெற்றிப் பெற்றது ஆடி என்பது குறிப்பிடத்தக்கது. இதே இன்ஜின் தான் ஆடி ஏ4 செடானில் உள்ளது என்பதால், இந்த செக்மன்ட் வண்டிகளில் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது எனலாம்.

ஆடிஏ4 அவசியமான பாதுகாப்பு அம்சங்கள்: ஒரு சொகுசுக் காரில் இருக்க விரும்பும் அத்தனை பாதுகாப்பு அம்சங்களும் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. EPT உடனான ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இஎஸ்பி, முன்பக்க இரட்டை ஏர்-பேக்குடன், சைட் ஏர்-பேக் மற்றும் கர்ட்டன் ஏர்-பேக்குகள் இதில் உள்ளது. ஆடிஏ4 - மொத்தத்தில்: சொகுசு கார் வரிசையில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ள, ஆடி ஏ4 உலகளவில் அதிகம் விற்ற மாடல் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)