தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்புதங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு ... பொது துறை நிறுவனங்கள்ரூ.2,500கோடிக்கு பங்கு விற்பனை பொது துறை நிறுவனங்கள்ரூ.2,500கோடிக்கு பங்கு விற்பனை ...
ரயில்வே வருவாய்ரூ.10,629கோடியாக சரிவு:சென்ற ஜூலை மாதத்தில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
01:33

புதுடில்லி: சென்ற ஜூலை மாதம், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய், அதன் இலக்கை (11,368கோடி ரூபாய்) விட, 6.6 சதவீதம் குறைந்து, 10,628.87கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இதே மாதத்தில், இந்திய ரயில்வேயில் அடங்கியுள்ள, 16 மண்டலங்களிலும், பயணிகள் ரயில்போக்குவரத்து வாயிலான வருவாயும், அதன் இலக்கை (3,624கோடி ரூபாய்) விட, 20.13 சதவீதம் குறைந்து, 2,894.62கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
பற்றாக்குறை:நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும், ஈட்டிய வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறையில், வடக்கு ரயில்வே, 25.07 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்த மண்டலம், மதிப்பீட்டு மாதத்தில், 546.09கோடி ரூபாய்ஈட்டியுள்ளது.அடுத்த இடங்களில்,மேற்கு ரயில்வே (23.58 சதவீதம் - 281.20கோடி ரூபாய்), கிழக்கு கடலோர ரயில்வே (22.02 சதவீதம் - 80.09கோடி ரூபாய்), மத்திய ரயில்வே (21.52 சதவீதம் - 304.46கோடி ரூபாய்), தென்கிழக்கு ரயில்வே (21.45 சதவீதம் - 116.66கோடி ரூபாய்), வட எல்லை ரயில்வே (20.85 சதவீதம் - 92.83கோடி ரூபாய்), கிழக்கு ரயில்வே (20.83 சதவீதம் - 160.21கோடி ரூபாய்), வருவாய்க்கும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் மிகக் குறைந்த அளவில் பற்றாக்குறை கொண்டதாக, தென்கிழக்கு மத்திய ரயில்வே உள்ளது.
சரக்குபோக்குவரத்து:இந்த மண்டலத்தின், இலக்கு அடிப்படையிலான வருவாய்பற்றாக்குறை, 20.83 சதவீதமாகவும், வருவாய், 160.21கோடி ரூபாயாகவும் உள்ளது.சரக்குபோக்குவரத்தை பொறுத்தவரை, இந்திய ரயில்வே, சென்ற ஜூலை மாதத்தில் ஈட்டிய வருவாய்க்கும்(7,230.70கோடி ரூபாய்), நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் (7,243.47கோடி ரூபாய்) உள்ள இடைவெளி, 0.18 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது.இந்திய ரயில்வேயின், 50 சதவீத மண்டலங்கள், சரக்குபோக்குவரத்தில், ஓரளவு சிறப்பான வருவாயை ஈட்டியதால், பற்றாக்குறை குறைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், வட கிழக்கு ரயில்வேயின் வருவாய், 38.56 சதவீதம் அதிகரித்து, 18.90கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அடுத்த இடங்களில், வட மத்திய ரயில்வே (15.14 சதவீதம்), கிழக்கு மத்திய ரயில்வே (11.95 சதவீதம் - 761.76கோடி ரூபாய்) மற்றும் தென்கிழக்கு ரயில்வே (10.06 சதவீதம் - 837.39கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.அதிக அளவில் சரக்குகளை கையாளும் தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம், சென்ற ஜூலை மாதம், வியக்கத்தக்க வகையில், சரக்குபோக்குவரத்து வருவாயில், மைனஸ், 2.26 சதவீத வளர்ச்சி கண்டு, 1,174.34கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
இதேபோன்று, தெற்கு மத்திய ரயில்வேயின் சரக்குபோக்குவரத்து வருவாய்வளர்ச்சியும், மைனஸ் 19.26 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டு, 524.45கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அதே சமயம், இதே மாதத்தில், கிழக்கு கடலோர ரயில்வேயின் சரக்குபோக்குவரத்து வாயிலான வருவாய், 7.26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 893.36கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரயில் பெட்டி:வடக்கு ரயில்வே, மிக குறைந்த அளவாக, 1.62 சதவீதம் வளர்ச்சி கண்டு, 529.92கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சரக்குபோக்குவரத்து வாயிலான வருவாய், 9.31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 206.22கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், ரயில்வே துறையின், இதர ரயில் பெட்டிகள் வாயிலான வருவாய், 5.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 292.42கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)