தங்கம் விலை சிறிது குறைந்ததுதங்கம் விலை சிறிது குறைந்தது ... ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் ...
ஜூலை மாதம் பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
13:08

புதுடில்லி : ஜூலை மாதத்துக்கான பணவீக்கம் 5.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்துக்கான பணவீக்கம் இன்று வெளியானது. இதில் பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்ந்து உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் 4.86 சதவீதமாக இருந்தது. வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வாலும், உணவு தொடர்பான பொருட்களின் விலை உயர்வாலும் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி, பருப்பு வகைகள் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் ஜூலை மாதத்துக்கான உணவுப்பொருட்களின் பணவீக்கம் 11.91 சதவீதம் உயர்ந்து 14.34 சதவீதமாக உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் இது 9.74 சதவீதமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் 114 சதவீதம் அதிகரித்த வெங்காயத்தின் விலை ஜூலை மாதத்தில் 145 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை 16.47-ல் இருந்து 46.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 2.75 சதவீதத்தில் இருந்து 2.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவுபொருள் அல்லாத எண்ணெய், கனிம வளங்கள், பைபர் உள்ளிட்ட பொருட்களுக்கான பணவீக்கம் 7.57 சதவீதத்தில் இருந்து 5.51 சதவீதமாக சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)