பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:01
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, நேற்று மேலும் வீழ்ச்சி கண்டது. நேற்று முன்தினம், அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய்மதிப்பு, 61.20ல் நிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், நேற்று, வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய்மதிப்பு, 61.47 ஆக சரிவடைந்தது. இந்த சரிவு நிலை, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 61.60 வரையிலும், குறைந்த பட்சமாக, 61.26 என்ற அளவிற்கும் சென்றது.வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய்மதிப்பு, முன்தினத்தை விட, 24 கா”கள் குறைந்து, 61.44 ஆக சரிவடைந்தது.நேற்று, எண்ணெய் இறக்குமதியாளர்கள், அதிக அளவில் டாலரை வாங்கினர். அதே சமயம், ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வங்கிகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு, டாலரை விற்பனை செய்தன. இருந்த போதிலும், ரூபாய்மதிப்பு சரிவைக் கண்டது.கடந்த ஜனவரி முதல் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 10.34 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|