"பொருளாதார வளர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம்'எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு சிதம்பரம் பதில்"பொருளாதார வளர்ச்சிக்கே அதிக முக்கியத்துவம்'எதிர்க்கட்சிகளின் ... ... வெங்காயம், அரிசி விலை உயர்வால்...நாட்டின் பொது பணவீக்கம் 5.79 சதவீதமாக அதிகரிப்பு வெங்காயம், அரிசி விலை உயர்வால்...நாட்டின் பொது பணவீக்கம் 5.79 சதவீதமாக ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டயர் உற்பத்தியில் சரிவு; ஏற்றுமதியில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2013
00:09

சென்ற 2012 - 13ம் நிதியாண்டில், இந்தியாவில் டயர் உற்பத்தி குறைந்திருந்த நிலையிலும், ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.சென்ற நிதியாண்டில், அனைத்து வகை டயர் உற்பத்தி, 12.30 கோடியாக இருந்தது.
பேருந்து:இது, முந்தைய, 2011 - 12ம் நிதியாண்டின் டயர் உற்பத்தியை (12.50 கோடி) விட, 2 சதவீதம் குறைவாகும் என, மோட்டார் வாகன டயர் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (அட்மா), வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், இதே காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த டயர் ஏற்றுமதி, 6 சதவீதம் அதிகரித்து, 79 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்து, 84 லட்சமாக அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், டிரக் மற்றும் பேருந்து டயர்களை விட, பயணிகள் கார் டயர் உற்பத்தி, சிறப்பாக இருந்தது.மூன்று சக்கர வாகனங்கள்சென்ற நிதியாண்டில், பயணிகள் கார்களுக்கான டயர் உற்பத்தி, 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.80 கோடியில் இருந்து, 3.20 கோடியாக உயர்ந்துள்ளது.டிரக் மற்றும் பேருந்துகளுக்கான டயர் உற்பத்தியும், ஓரளவிற்கு நன்கு இருந்தது. சென்ற நிதிஆண்டில், டிரக் மற்றும் பேருந்து டயர்களின் உற்பத்தி, 1.65 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய, 2011 - 12ம் நிதியாண்டில், 1.60 கோடியாக குறைந்து இருந்தது.
எனினும், ஆட்டோ உள்ளிட்ட, மூன்று சக்கர வாகனங்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், இலகு ரக டிரக் ஆகியவற்றுக்கான டயர் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்திருந்தது.சென்ற நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட, மூன்று சக்கர ஸ்கூட்டர்களுக்கான டயர்களின் எண்ணிக்கை, 30 சதவீதம் குறைந்து, 60 லட்சமாக சரிவடைந்துள்ளது. இது,முந்தைய நிதியாண்டில், 86 லட்சமாக இருந்தது.
சென்ற நிதியாண்டில், இருசக்கர ஸ்கூட்டர்களுக்கான டயர்களின் உற்பத்தி, 27 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.36 கோடியில் இருந்து, 99 லட்சமாக குறைந்து உள்ளது.இருசக்கர வாகனங்களின் அறிமுக பிரிவிற்கான டயர் உற்பத்தி, 59 சதவீதம் அதிகரித்துள்ளது.இலகு ரக வர்த்தக வாகன டயர்களின் உற்பத்தி, 11 சதவீதம் சரிவடைந்து, 60 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.இதே காலத்தில், மோட்டார் சைக்கிள்களுக்கான டயர்கள் உற்பத்தி, 4.40 கோடியில் இருந்து, 4.30 கோடியாக சரிவடைந்து உள்ளது.
கார்கள்:நாட்டின் முன்னணி டயர் நிறுவனங்களின் ஒட்டுமொத்த டயர் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில், 84 லட்சமாக உயர்ந்து இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டில், 79 லட்சமாக இருந்தது.அதே சமயம், இருசக்கர ஸ்கூட்டர் பிரிவில், டயர்களின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டில், 48 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், 17 லட்சம் கார் டயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 16 லட்சமாக இருந்தது.டிரக் மற்றும் பேருந்து டயர்களின் ஏற்றுமதி, 5 சதவீதம் உயர்ந்து, 23 லட்சமாக அதிகரித்து உள்ளது.இதே காலத்தில், மோட்டார் சைக்கிள் டயர்களின் ஏற்றுமதி, 25 சதவீதம் உயர்ந்து, 95 லட்சத்தில் இருந்து, 1.20 கோடியாக உயர்ந்து உள்ளது.
ஸ்கூட்டர்கள்:அதே சமயம், இதே காலத்தில், இருசக்கர ஸ்கூட்டர் டயர்களின் ஏற்றுமதி, 45 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து, 1.50 லட்சத்தில் இருந்து, 77,384 ஆக குறைந்துள்ளது. ஒட்டு மொத்த அளவில், அறிமுக பிரிவிற்கான டயர்களின் ஏற்றுமதி, 88,675 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1,41,350 ஆக உயர்ந்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)