தாவர எண்ணெய்இறக்குமதி 8.89 லட்சம் டன்னாக எகிறியதுதாவர எண்ணெய்இறக்குமதி 8.89 லட்சம் டன்னாக எகிறியது ... இந்திய இறால் இறக்குமதிக்குஅமெரிக்க அரசு வரி குறைப்பு இந்திய இறால் இறக்குமதிக்குஅமெரிக்க அரசு வரி குறைப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் பயன்பாடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
00:52

புதுடில்லி:நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்., - ஜூன்), இந்தியாவின் தங்கம் பயன்பாடு, 310 டன்னாக அதிகரித்து உள்ளது. இது கடந்த,10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்து உள்ளது.
வரி உயர்வு:மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், இவற்றின் இறக்குமதி மீதான வரி,
8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில்,இந்தியாவின் தங்கம் இறக்குமதி,338 டன்னாகவும், பயன்பாடு,
181.10டன்னாகவும் இருந்தது. பயன்பாட்டை விட, தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத் தில், இதன் விலை சரிவடைந்திருந்தது. இதுகுறித்து, உலக தங்க கவுன்சில் (இந்தியா) நிர்வாக இயக்குனர் சோம சுந்தரம் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் தங்கத்திற் கான தேவை மிகவும் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், தங்கத்தின் விலை சரிவடைந்திருந் ததை அடுத்து,மதிப்பீட்டு காலாண்டில், ஆபரணங்களுக்கான தேவை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 188 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது,கடந்தாண்டு இதே காலாண்டில்,124 டன்னாக இருந்தது.இதே காலாண்டு களில், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான பயன்பாடும், 56.5 டன்னிலிருந்து, 122 டன்னாக அதிகரித்து உள்ளது.
தேவை:நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை,310 டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில்,71 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டில், இந்தியா வின் தங்கம் இறக்குமதி,900-1,000 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கடத்தல் தங்கம் உஷார்...இறக்குமதி வரி உயர்வால்,தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால், விமான நிலையங்கள், துறைமுகங்கள்,சர்வதேச எல்லை பகுதிகளில், தங்கம் கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டு உள்ளது.குறிப்பாக மலேசியா,வளைகுடா நாடுகளில் இருந்து வரும்,சந்தேகத்திற்கு இடமான சரக்கு பெட்டகங்கள், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுகளில் உள்ள, சுங்கத் துறையின் அயல்நாட்டு புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து இந்தியா விற்கு அனுப்பப்படும் சரக்குகள் குறித்து, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். நிதி, சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகளும், கடத்தல் தங்கத்தை தடுக்க, விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)