தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தொட்டது ... ஸ்கூட்டரின் மைலேஜ் உங்கள் கையில்! ஸ்கூட்டரின் மைலேஜ் உங்கள் கையில்! ...
காரை சிக்கனமாக சுத்தம் செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
23:11

கார் வாங்குவது இப்போதெல்லாம் ஜூஜூபி மேட்டர் ஆகி விட்டது. அந்த காரை பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. காரை வாஷ் செய்வதற்கென ஒர்க்ஷாப்புகள் இருந்தாலும், நம் காரை நாமே கழுவும்போது சிறு கீறல்கள் விழுவதை தவிர்க்கலாம். சிக்கனமாக நாமே காரை கழுவி சுத்தம் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு சோப், இரு பக்கெட், கந்தல் துணி இருந்தால் போதும். பணியை துவங்கி விட்டால், உங்கள் பிள்ளைகளும் உற்சாகமாக உதவுவார்கள். சரி...இனி துவங்குவோமா?

முதலில் உங்கள் காரை சூரிய வெளிச்சம் நேரடியாக படாத இடத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள். முதல் முறை கழுவியவுடன் திட்டு திட்டாக காய்வதை இது தடுக்கும். சுத்தம் செய்ய தேவையான பொருட்களை முதலிலேயே அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பக்கெட்டில் உள்ள தண்ணீரில் கார் வாஷ் சோப்பை தேவையான அளவு கலக்கவும். மற்றொரு பக்கெட்டில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளவும்.ஹோஸ் பைப்பை ஸ்மூத் ஆக காரின் மீது பாய்ச்சவும். தண்ணீரை வேகமாக பீச்சியடித்தால் காரின் மீது கீறல் விழும். ஜன்னல்களில் தண்ணீரை மேல் நோக்கி பாய்ச்சவும். துணி அல்லது ஸ்பாஞ்சை சோப்பு தண்ணீரில் முக்கி காரை கழுவ ஆரம்பிக்கவும். அழுக்கு ஸ்பாஞ்சை அடிக்கடி சுத்தமான தண்ணீர் அடங்கிய பக்கெட் தண்ணீரால் சுத்தம் செய்யவும். காரின் ஒரு பகுதியை கழுவி முடித்து விட்டால், ஹோஸ் தண்ணீரை பீய்ச்சியடித்து அந்த பகுதியை கழுவி விட வேண்டும். தவறினால் சோப் காய்ந்து கறையாக மாறி விடும். ஈரத்தை காற்று காய வைக்கும் முன் டவலால் ஈரத்தை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும்.

காரின் கீழ் பாகத்தில்தான் சகதியும், அழுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த பாகங்களைதான் கடைசியாக சுத்தம் செய்ய வேண்டும். கீழ் பகுதியை சுத்தம் செய்வதற்கென தனியாக வேறு ஸ்பாஞ்ச் வைத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. கார் சக்கரத்தை சுத்தம் செய்ய, நீளமான பிரஷை பயன்படுத்தவும். கார் டயர் ஓரங்களை மட்டும் பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். டயரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஹோஸ் பைப்பால் தண்ணீரை பீய்ச்சியடிக்கவும். கார் முழுவதையும் சுத்தம் செய்து முடித்த பின் சுத்தமான காய்ந்த டவலால் ஈரத்தை துடைத்தெடுக்கவும். இப்போது பார்த்தால்...இது நம் கார்தானா என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

சுத்தமான பராமரிப்புக்கு "டிப்ஸ்'
* காரை கழுவும் முன் அனைத்து ஜன்னல்களையும் இறுக மூட மறக்க வேண்டாம். சிறு இடைவெளி வழியாக தண்ணீர் உள்ளே சென்றால் சீட்டில் நாசமாகி விடும்.
* பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப்பை, கார் கழுவ பயன்படுத்தக் கூடாது. கார் பெயின்டின் மீதுள்ள மெழுகை இது உரித்து எடுத்து விடும்.
* நீண்ட நாட்கள் பயன்படுத்தாதபோது, பறவை எச்சம் படாதவாறு எப்போதும் காரை மூடி வைத்திருப்பது நல்லது. * சூடான தண்ணீரில் முக்கிய பழைய துணியால் இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால், காரின் பெயின்டை பதம் பார்த்து விடும்.
* இந்த துணி மற்றும் ஸ்பாஞ்ச் ஆகியவற்றை வாஷிங் மெஷினில் போட்டுதான் சுத்தம் செய்ய
வேண்டும்.
* காரின் மீது அதிக சகதி அல்லது அழுக்கு இருந்தால் பலமுறை சோப் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகாலை அல்லது மாலை நேரங்கள்தான் சுத்தம் செய்ய உகந்த நேரங்கள்.
* காரின் உட்புற கண்ணாடிகளை அமோனியா கலந்த தண்ணீரால் கழுவினால் பெயின்ட் அல்லது பிலிம் உரிய வழி வகுத்து விடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)