பதிவு செய்த நாள்
21 ஆக2013
00:08
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 56 ரூபாய் குறைந்து, 23,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை சற்று குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இரு தினங்களாக ஆபரண தங்கம் விலை சரிவடைந்துள்ளது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,938 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 31,425 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாய் குறைந்து, 2,931 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. சவரனுக்கு, 56 ரூபாய் சரிவடைந்து, 23,448 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 75 ரூபாய் குறைந்து, 31,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 55.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 52,070 ரூபாய்க்கும் விற்பனையானது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு, நேற்று, மும்பை தங்கம், வெள்ளி சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|