மொபைல் போன் டிப்ஸ்மொபைல் போன் டிப்ஸ் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இளைய தலைமுறை மனதை கவ்வும் டி.வி.எஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
16:58

முதல் மாத சம்பளத்தில், எப்படியாவது பாதி தொகை கொடுத்து, இரு சக்கர வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் போது, மனதுக்குள் ஏதோ சாதித்து விட்ட உணர்வு மேலோங்கும். இரு சக்கர வாகன சந்தையில், தனக்கென தனியிடம் பிடித்து முத்திரை பதித்து வருகிறது டி.வி.எஸ்., லேட்டஸ்ட் டி.வி.எஸ்., வாகனங்கள் குறித்து விவரிக்கிறார், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின், கோவை ஏரியா மானேஜர் சுதர்சன். நடப்பாண்டில், டி.வி.எஸ்., நிறுவனம் ஆடி தள்ளுபடியை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 'ஸ்டார் சிட்டி' வாகனம் சாம்பல் நிறத்தில் புதிதாக வெளிவந்து பார்வையை வசப்படுத்துகிறது. அபாச்சி ஆர்.டி.ஆர்., (160 சிசி)ல், சிவப்பு, பச்சை, சாம்பல் என, மற்ற வண்ணங்கள் கலந்திருக்காமல், ஒரே நிறத்தில் கவர்வது, பார்வைக்கு விருந்து படைக்கிறது. 160 சிசி.,யிலான வெள்ளை நிற அபாச்சி, அடுத்த மாதம் சந்தைக்கு வந்து, அமோக வரவேற்பு பெற காத்திருக்கிறது. பெப், ஸ்ட்ரீக் வாகனங்களுக்கு, முன்பணமாக ரூ.4,999ம், 'வீகோ'வுக்கு, ரூ.7,999ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி சிறப்பு சலுகையாக, ரூ.2,500 மதிப்புள்ள பட்டர்பிளை இண்டக்ஷன் ஸ்டவ் வழங்கப்படுகிறது. எந்த இரு சக்கர வாகனங்களையும் மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது எங்களிடம் குறிப்பிடத்தக்க அம்சம். இதற்கு சிறப்பு சலுகையாக சிறப்பு பரிசு அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஸ்போர்ட் வாகனத்துக்கு முன்பணமாக ரூ.6,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை, வரும் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். வாகனத்தை வாங்கும் போது, ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கும் பட்சத்தில், பூஜ்ஜிய சதவீத வட்டிச் சலுகையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு, சுதர்சன் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)