மொபைல் போன் டிப்ஸ்மொபைல் போன் டிப்ஸ் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பேரை கேட்டாலே சும்மா (சாலை) அதிருதில்ல..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
17:11

ஹார்லே டேவிட்சன்

மோட்டர் பைக் ரசிகர்கள் ஒவ்வொருவரின் கனவும் வாழ்க்கையில் முறையேனும் ஹார்லே டேவிட்சன் மோட்டர் பைக்கை தொட மாட்டோமா என்பதாகவே இருக்கும். கம்பீரமான தோற்றம், முரட்டுத்தனமான செயல்திறன், சாகச பயணங்களுக்கேற்ற பாதுகாப்பு அம்சங்கள், அங்கங்கள் நோகாத வசதியான இருக்கை அமைப்பு, ஓட்டுவதற்கு சுலபமான, சுகமான அம்சங்கள் என்று இதன் தன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். 110 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டர் சைக்கிள் உற்பத்தியில் இருக்கும் ஹார்லே டேவிட்சன் நிறுவனம், 2009ம் ஆண்டுதான் இந்திய மக்களின் ஆசையை தணிக்க இங்கு வந்தது. 2013ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு உள்ள ஹார்லே டேவிட்சன் மோட்டார் பைக்குகள் மொத்தம் 12 மாடல்கள். அவைகளின் முக்கிய அம்சங்களை கீழ்வருமாறு காணலாம்.


சூப்பர் லோ
ஹார்லே டேவிட்சனுக்கு உண்டான தரத்துடன், ஸ்டீலினால் ஆன பாகங்கள், பரீமியம் பெயின்ட், பிசிறில்லாத க்ரோம் கொண்ட வெளித்தோற்றம் கொண்டுள்ளது. ப்ளாக்ஹெட் என்றழைக்கப்பட்ட எவல்யூஷன் என்ஜின் ஏர் கூலன்ட் 883 சி சி திறனுடன் எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்டு இயங்குகிறது. இதன் அலுமினிய ஹெட் மற்றும் சிலிண்டர்கள் பைக்கிள் எடையை குறைத்து ஏர் கூலிங் திறனை அதிகரித்துள்ளது. இதன் ஹச்-டி ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் வாகனத்தில் பாதுகாப்பு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக கையாள்கிறது. ஹேண்ட்ஸ் -ப்ரீ பாப்பை இக்னீஷன் சாவி வளையத்தில் கோர்த்துக் கொண்டதுடன் நம் வேலை முடிந்தது. இதன் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி செயல்பாடுகளை பைக் தானாகவே செய்துக் கொள்ளும். இதன் விலை 5,71,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

தி அயர்ன் 883
இது க்ரோம் எதுவும் இல்லாத கருப்புக் குதிரையாய் பார்க்க கம்பீரமாகவும் ஆக்ரோஷமாகவும் தெரிகிறது. இதன் சீட்டின் உயரம் வெறும் 25.7 அங்குலம் தான் இருக்கும். தரையிலிருந்து ஒருவர் அமர்ந்து செல்லும் வசதியுடன் இருக்கிறது தி அயர்ன் 883 இதன் முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளதாலும் சுகமான அதிர்வற்ற பிரயாணத்தை வழங்குகிறது. இதன் என்ஜின் ஏர் கூல்ட் எவல்யூஷன் என்ஜினாகும். 883 சி.சி., திறனுடன் எலக்ட்ரானிக் சீக்வென்ஷயல் போர்ட் ப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்டு இயங்குகிறது. இதன் விலை 6,71,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

பார்ட்டி எய்ட்
முன்புறம் அகலமான டயர், சின்ன ஸ்டீல் டாங்க், குட்டையான உயரம் என்று நகர போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதிலும் எவல்யூஷன் என்ஜின், ஹச்-டி ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் போன்றவை உள்ளன. இதன் உயரமும் வெறும் 26 அங்குலம் மட்டுமே உள்ளது. பார்வர்ட் -மவுன்டட் கண்ட்ரோல் இம்மாடலில் உள்ளதால் சற்றே கால்களை அகற்றி பின் நகர்ந்து உட்காரலாம். இதன் விலை 8,76,000 ரூபாயிலிந்து துவங்குகிறது.

ஸ்ட்ரீட் பாப்

வெறும் பயணத்திற்கு தேவையான அம்சங்கள் மட்டும் நிறைவாக கொடுக்கப்பட்டு அம்சமாக இருக்கிறது இந்த பைக். இதனை நம் ரசனை மற்றும் தேவைக்கேற்ப நாமே டிசைன் செய்து கொள்ளலாம். இதில் ஸ்மார்ட் செக்யூரிட்டிசிஸ்டம் இருப்பதுடன் இதன் ஆண்ட்டி லாக் ப்ரேக்களும் உள்ளன. கண்ட்ரோல்கள் வண்டியின் நடுவிலேயே பொருத்தப்பட்டுள்ளன. இதன் விலை 10,16000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

சூப்பர் க்ளைட் கஸ்டம்
அதிகமான க்ரோம் பாகங்களுடன் அதிக சக்தியை வழங்குவதாய் உள்ளது இந்த பைக் இதன் ட்வின் கேம் 96 என்ஜின் 1585 சிசி திறனுடன் எலக்ட்ரானிக் சீக்வென்ஷியல் போர்ட் ப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்டு இயங்குவதுடன் 125 என்.எம். டார்க்கை வழங்குகிறது. இதன் விலை 11,71,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

பேட் பாப்
இந்த முரட்டுத்தனமான பெரிய அளவுள்ள பைக் அதிகசக்தியுடன் பிரமிப்பான செயல் திறனுடன் விளங்குகிறது. இதில் டவின்கேம் 103 என்ஜின் உள்ளது. அட்ஜஸ்டிபிள் சஸ்பென்ஷன் கொண்டு உள்ளது இந்த பைக் பார்வர்ட் மவுன்ட் கண்ட்ரோல் உள்ளதால் பின்புறமாக அமர்ந்து கால்களை நீட்டி வைத்து ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது. இதன் விலை 12,81,0000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

சாப்டெயில் என்ற பெயரில் பேட்பாய், பேட் பாய் ஸ்பெஷல் ஹெரிடேஜ் க்ளாசிக்

நாற்பது ஆண்டுகளாக மவுசு குறையாமல் இருப்பது இந்த மாடலின் வடிவம். இதில் பேட் பாய் ஸ்பெஷலில் பிடித்துக் கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்ட ஹாண்டில் பார், குட்டையான அகலம் குறைவான சீட் கொண்டுள்ளது. ரிலாக்சாக அமர்ந்து ஓட்டக் கூடியதா# வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பைக்குகள். இதன் ஹெரிடேஜ் க்ளாசிக் மாடலில் லேஸ்ட் வீல்கள், லெதரினால் மூடப்பட்ட பாகங்கள், அதிக க்ரோம், ஏழு அங்குல பால் ஹெட் லாம்ப் என்று மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் டவின் கேம் 103 என்ஜின், ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் மற்றும் ஏ.பி.எஸ்., உள்ளது. இவற்றின் விலை முறையே 14, 90,000/15,60,000/16,25,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

நைட் ராட் ஸ்பெஷல்

மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை ஆரம்பம் முதல் கடைசி வரையில் இந்த பைக்கில் காண முடிகிறது. என்ஜின், வீல் போர்க் , டிரிப்பிள் க்ளாம்ப், ஸ்விங் ஆர்ம் எல்லாமே கருப்பு நிறத்தில் இருப்பதால் இந்த முரட்டுத் தோற்றம். இதன் ரெவல்யூஷன் என்ஜின் 1247 சி.சி., திறனுடன் 111என்.எம் டார்க்கையும் வழங்குகிறது.இதன் விலை 21,75,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

டூரிங் என்ற பெயரில் ரோட் கிங், ஸ்ட்ரீட் க்ளைட்

தூர பிரயாணங்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை ரோட் கிங் மற்றும் ஸ்ட்ரீட் க்ளைம். பெரிய ப்யூவல் டாங்க், ட்யூவல் கலர் பெயின்ட், க்ராபிக்ஸ் என்று கலக்கும் இவற்றில் ஸ்ட்ரீட் க்ளைட்டில் பளிச்சென்ற நிறங்களில் வருகிறது. இவற்றில் ட்வின் கேம் 103 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏ.எம்.,/எப்.எம்., மற்றும் சிடி, எம்.பி.,3 ப்ளேயர் கொண்டே அட்வான்ஸ்ட் ஆடியோ சிஸ்டம் இரண்டு ஸ்பீக்கர்களுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை 22,81,000 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)