பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:56

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், வெளிநாடுகளில் நிதி திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கலாமா என, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பங்கு சந்தைகள்இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், இதுபோன்ற நிறுவனங்கள், அவற்றிற்கு தேவையான நிதியை, வெளிநாடுகளில் இருந்து திரட்டிக் கொள்வதுடன், அவற்றின் பங்குகளை, அன்னிய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ள முடியும். தற்போதைய, நெறிமுறைகளின் படி, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனமே, வெளிநாடுகளில் நிதிதிரட்டி, அந்நாடுகளின் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ள முடியும். இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள முடியும். இதன் வாயிலாக, நம் நாட்டிற்கு அதிக அளவில் அன்னியச் செலாவணியும் கிடைக்கும் என, அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது.
இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதுடன், அது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்துள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிப்பது மற்றும் செலாவணி வரத்தை விட, செலாவணி அதிகளவில் வெளியேறுவது போன்றவற்றால், நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.நடப்பு கணக்கு பற்றாக்குறைகடந்த, 2012- 13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில், (ஜி.டி.பி.,) 4.8 சதவீதம் அல்லது 8,820 கோடி டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 3.7 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைத்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|