பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:57

மும்பை : தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தை, நேற்று மீண்டும் எழுச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்', 2.27 சதவீதம் உயர்ந்தது.சீனாவின் தயாரிப்பு துறை, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.இந்திய பங்குச் சந்தையில், உலோக துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, 8-10 சதவீதம் வரை உயர்ந்தது.
மேலும், வங்கிகளின் வ‹லாகாத கடனை குறைக்கும் நோக்கில் விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்ய உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதனால், வங்கிப் பங்குகளின் விற்பனை ‹டு பிடித்தது. மொத்தத்தில், நேற்றைய வியாபாரத்தில், பெரும்பாலான நிறுவனப் பங்குககள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, டாட்டா ஸ்டீல், ரான்பாக்சி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் சா, சேச கோவா ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகள் விலை, 15 - 20 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 407.03 புள்ளிகள் உயர்ந்து, 18,312.94 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,349.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,759.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,எச்.டீ.எப்.சி., நிறுவனம் மற்றும் எச்.டீ.எப்.சி பேங்க் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகள், விலை உயர்வைக் கண்டன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 105.90 புள்ளிகள் உயர்ந்து, 5,408.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,418.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,254.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|