பதிவு செய்த நாள்
23 ஆக2013
17:30

யமஹா ஒய்இசட் எப் ஆர்15 ஒன் மேக் ரேஸ் சாம்பியன்ஷிப் சீசன் 2013 இரண்டாவது சுற்று போட்டிகள் சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் நிறைவடைந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்களை ஏராளமான பைக் ரேஸ் ஆர்வலர்கள் திரண்டிருந்து உற்சாகப்படுத்தினர். இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மேலும் 3 சுற்றுகள் நடைபெற்று வரும் டிசம்பர் 2013ல் நிறைவடையும். மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) மற்றும் பெடரேஷன் ஆப் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆப் இந்தியா (எப்எம்எஸ்சிஐ) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியாளர்கள் யமஷாவின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் ஒயிஇசட் எப் - ஆர்15 வாகனத்தில் பந்தயப் பாதைக்கு வந்து பைக்கில் தங்கள் வேகத்தை காட்டினார்கள். முழுமையான யமஹா ரேசிங் டிஎன்ஏ-வுடன் கூடிய ஒய்இசட் எப் - ஆர்15 பைக்கிங் ஆர்வலர்களுக்கு முழுமையான ரேசிங் அனுபவத்தை தந்தது. இந்த வாகனத்தின் ஆற்றல், நிலையான தன்மை, கார்னரிங் மற்றும் பிரேக்கிங் ஆகியவற்றை போட்டியாளர்கள் நேரடியாக அனுபவித்தனர். இந்த பைக்குகளில் டேடோனா ரேசிங் கிட்களை பொருத்தி அவர்களது அனுபவத்தை யமஹா அதிகரிக்க செய்தது. இந்த கிட்கள் மோட்டோ ஜிபி மற்றும் உலக சூப்பர் பைக் ரேசிங்கில் பெற்ற மதிப்புமிகு அனுபவத்தை கொண்டு உருவாக்கப்பட்டதுடன் குளோஸ்ட் சர்க்யூட்டில் ரேசிங் பயன்பாடுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|