பதிவு செய்த நாள்
23 ஆக2013
17:50

ஜெர்மானிய சொகுசுக்கார் உற்பத்தி நிறுவனமான, ஆடி இந்திய நகரங்களின் சாகசக்கார் ஆர்வலர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, ஆடி ஸ்போர்ட்ஸ் கார் எக்ஸ்பீரியன்ஸ் (ASE)என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ASE 2013 ஆடி ரசிகர்களுக்காக ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டது. ஆடி TT, ஆடி S4, ஆடி R8 போன்ற ‹ப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களை இயக்கவும், ஓட்டவும் கூடிய பயிற்சிகளை அனுபவமிக்க நிபுணர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். ஆடி கார் ஆர்வலர்கள் மகிழ்ச்சியான சாகச ஓட்டும் அனுபவத்தை வழங்கும் இந்நிகழ்ச்சி சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் நடத்தப்படவுள்ளது. F1 மற்றும் ரேசிங் ஸ்போர்ட்ஸ் ஓட்டுனர்களை உருவாக்கி கொடுத்துள்ள சென்னையில் சாகச கார் பயண ஆர்வலர்கள் இருப்பது இயல்பே. 125 க்கும் மேற்பட்ட பேர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர் என்று கூறினார் ஆடி சென்னையின் ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் பி லிமிடெட்டின் சிஇஓ ஓ.சுப்ரமணியன்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|