பதிவு செய்த நாள்
24 ஆக2013
00:49

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இந்தியா, பாசுமதி ஏற்றுமதியில், புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில் ஈரான் மீது வர்த்தக தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அந்நாடு, அதிக விலை கொடுத்து, இந்திய பாசுமதி அரிசியை வாங்கி குவித்து வருகிறது.பயன்பாடு:"இதனால், சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, சென்ற ஆண்டின், இதே காலத்தை விட, 25 சதவீதம் அதிகரித்து, 15 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது' என, இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆர்.எஸ்.சேஷாத்ரி தெரிவித்தார்.
இந்த கணக்கின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, சென்ற நிதிஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 38 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிரியாணி, புலவு உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க, பாசுமதி அரிசி பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச பாசுமதி அரிசி சந்தையில், இந்தியா, 65 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
வளைகுடா நாடுகள்:இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு, அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியாகிறது. இந்தியாவின் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்து கொள்வதில், சவுதி அரேபியா முதலிடத்திலும், ஈரான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவை தவிர, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகளுக்கும், இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதியாகிறது.சுவைமிக்க, கம கமவென மணம் வீசும் இந்திய பாசுமதி அரிசி, ஈரானியர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. அதனால், இந்தியாவில் இருந்து ஈரானுக்கு, அதிக அளவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியாகி வருகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், ஈரானுக்கு மட்டும், 6.02 லட்சம் டன் பாசுமதி அரிசியை அனுப்ப, ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.ஈரானில், பாசுமதி அரிசிக்கானதேவை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு, அதன் விலையும், 44 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால்,கே.ஆர்.பீ.எல்., எல்.டி.புட்ஸ்,கோகினூர் புட்ஸ்போன்ற, பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருகிறது.கடந்த, 2011-12ம் நிதியாண்டு, ஒரு டன் பாசுமதி அரிசியின் சராசரி ஏற்றுமதி விலை, 900 டாலராக இருந்தது. இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 1,300 டாலராக அதிகரித்தது.
கூடுதல் பரப்பளவு:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலைமேலும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, ஈரானுக்கு, ஒரு டன் பாசுமதி அரிசி, சராசரியாக, 1,659 டாலர் என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.பாசுமதி அரிசி விலை அதிகரித்து வருவதால், இதர பயிர்களின்வேளாண்மையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பார்வை, பாசுமதி பக்கம் திரும்பியுள்ளது.
ஏற்கனவே, பாசுமதி நெல் வகையை பயிரிட்டு வந்த விவசாயிகள், தற்போது கூடுதல் பரப்பளவில், அவற்றை பயிரிட்டு வருகின்றனர்."பாரம்பரிய பயிர்களை விட, பாசுமதி நெற்பயிரில் இரு மடங்கு வருவாய் கிடைப்பதால், இமயமலை அடிவாரத்தில் வசிக்கும் விவசாயிகள் பாசுமதி பயிரிடும் பரப்பளவை, அதிகரித்துள்ளனர்' என,சேஷாத்ரிமேலும் கூறினார்.மொத்தத்தில், ஈரானில் இந்திய பாசுமதி அரிசிக்கானதேவை பெருகி வருவதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்து வருகிறது.
இத்துடன், கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 16 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளதும், இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க வழி செய்து உள்ளது.மேற்கண்டவற்றால், பாசுமதி அரிசி ஏற்றுமதியில், இந்தியா சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பரஸ்பர வர்த்தகம்:கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியா-ஈரான் இடையே, 1,597கோடி டாலர் மதிப்பிலான பரஸ்பர வர்த்தகம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து, பாசுமதி அரிசியுடன்,தேயிலை, சர்க்கரை, உருக்கு மற்றும் ரசாயனங்களும் ஈரானுக்கு ஏற்றுமதியாகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|